சென்னை: தனது 24வது படமாக உருவாகி வரும் ஐசரி கணேஷ் தயாரிக்கும் படத்தில் முதன்முறையாக 9 வேடங்களில் நடிக்கிறார் ஜெயம் ரவி.

தமிழ் சினிமாவில் ஒரே படத்தில் மூன்றுக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களில் நடித்த நடிகர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். முதல் முறையாக ‘நவராத்திரி’ படத்தில் 9 வேடங்களில் நடித்து நடிகர் திலகம் சிவாஜிகணேசன் சாதனை புரிந்தார்.

அவரைத் தொடர்ந்து, ‘தசாவதாரம்’ படத்தில் 10 வேடங்களில் நடித்து கமல்ஹாசன், புதிய சாதனையை ஏற்படுத்தினார். இந்நிலையில், இந்தப் பட்டியலில் ஜெயம் ரவியும் சேர்ந்துள்ளார்

கோமாளி:
கோமாளி தலைப்பு:
ஜெயம் ரவியின் 24வது படமாக உருவாகும் இந்தப் படத்திற்கு கோமாளி எனப் பேர் வைக்கப்பட்டுள்ளது. ஐசரி கணேசன் தயாரிக்கும் இப்படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்குகிறார். ஜெயம் ரவிக்கு ஜோடியாக முதன் முறையாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.

24வது படம்:
9 வேடம்:

இப்படம் குறித்து பிரதீப் ரங்கநாதன் கூறுகையில், “இது, ஜெயம் ரவி நடிக்கும் 24-வது படம். இதில் ராஜா, ஆதிவாசி, பிரிட்டீஷ் காலத்து அடிமை, 1990-களில் வாழ்ந்த இளைஞர் உள்பட 9 வேடங்களில் அவர் நடிக்கிறார். இந்த 4 வேடங்கள் தவிர மற்ற வேடங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

யோகி பாபு:
முக்கிய வேடத்தில் யோகி பாபு:

படத்தின் இன்னொரு கதாநாயகியாக சம்யுக்தா ஹெக்டே நடிக்கிறார். கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்

நகைச்சுவை:
நகைச்சுவை படம்:

தொழில்நுட்ப துறையில் வளர்ச்சி அடைந்துள்ள இன்றைய உலகையும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும் சித்தரிக்கும் படம், இது. இதை நகைச்சுவையாக சொல்லியிருக்கிறோம். பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது” எனத் தெரிவித்துள்ளார்.