லாஸ் ஏஞ்சல்ஸ்: அவெஞ்சர்ஸ்: என்ட் கேம் படத்தில் நடித்தவர்களின் சம்பள விபரம் குறித்து தெரிய வந்துள்ளது.

அவெஞ்சர்ஸ்: என்ட் கேம் படம் உலக அளவில் பாக்ஸ் ஆபீஸை ஆதிக்கம் செய்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் ரிலீஸான மூன்றே நாட்களில் ரூ. 150 கோடி வசூலித்தது. தற்போது ரூ. 300 கோடி வசூலை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

அவெஞ்சர்ஸ் இந்தியாவில் மட்டும் ரூ. 400 கோடி வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அந்த படத்தில நடித்தவர்களின் சம்பள விபரம் வெளியாகியுள்ளது.

அயர்ன்மேன்
ராபர்ட் டவ்னி ஜூனியர்
அயர்ன்மேனாக நடித்த ராபர்ட் டவ்னி ஜூனியர் அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வாரில் நடிக்க ரூ. 524 கோடி சம்பளம் வாங்கினாராம். மேலும் ஸ்பைடர்மேன்: ஹோம்கமிங் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடிக்க 3 நாட்கள் கால்ஷீட் கொடுத்தார் அவர். நாள் ஒன்றுக்கு அவர் 5 மில்லியன் டாலர் சம்பளம் வாங்கியுள்ளார்.

சம்பளம்
மார்வெல்

சுமார் 10 ஆண்டுகளாக அயர்மேனாக நடித்து வரும் ராபர்ட் டவ்னி ஜூனியர் மார்வெல் ஸ்டுடியோஸின் பாஸ் கெவின் ஃபீஜுடன் சம்பள ஒப்பந்தம் ஒன்றை சில ஆண்டுகளுக்கு முன்பு போட்டுள்ளார். அந்த ஒப்பந்தப்படி தான் அவருக்கு கூடுதல் சம்பளம் கிடைக்கிறது

தோர்
கிறிஸ்ஹெம்ஸ்வொர்த்

தோர் நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், கேப்டன் அமெரிக்கா கிறிஸ் இவான்ஸ், ஸ்கார்லட் ஜொஹன்சன் ஆகியோர் அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார் படத்தில் நடிக்க ரூ. 139 கோடி சம்பளம் வாங்கியுள்ளனர். எந்த நடிகருக்கும் அயர்ன்மேன் அளவுக்கு அதிக சம்பளம் இல்லை.

என்ட் கேம்
வெற்றி

அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார் படத்தை விட என்ட் கேம் படம் மிகப் பெரிய வெற்றி அடைந்துள்ளது. அதனால் இந்த படத்திற்கான சம்பளமும் கூடுதலாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.