நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள்.

சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள். அப்படி இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என்பதை பார்க்கலாம்

மேஷம்
முக்கியப் பொறுப்பில் பணியில் உள்ளவர்களுக்கு மேன்மை உண்டாகும். தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். போட்டிகளில் உங்களுக்குச் சாதகமான சூழ்நிலை உண்டாகும். நண்பர்களுடன் வெளியூா் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். பணியில் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் பச்சையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் இருக்கும்.

ரிஷபம்

வாடிக்கையாளர்களுடைய முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். அதனால் உங்களுடைய தனலாபம் அதிகரிக்கும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களின் வழியாக சுப செய்திகள் வந்து சேரும். எதையும் தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றலால் அனுகூலங்கள் உண்டாகும். வீட்டில் உள்ளவர்களின் மூலமும் லாபம் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளநீல நிறமாகவும் இருக்கும்.

மிதுனம்

உழைப்புக்குற்ற அங்கீகாரம் உங்களுக்குக் கிடைக்கும். வீட்டில சகோரதரர்களின் ஆதரவு கிடைக்கும். விளையாட்டு வீரர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடைய ஆதரவு கிடைக்கும். காது சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சாம்பல் நிறமும் இருக்கும்.

கடகம்

பயணங்களின் மூலம் நினைத்த காரியத்தை வெற்றியுடன் முடிப்பீர்கள். சிந்தனையின் போக்கினில் மாற்றம் உண்டாகும். உடல் சோர்வின் காரணமாக எடுத்த காரியத்தை நிறைவேற்ற கால தாமதமாகும். நினைவாற்றலில் மந்தத்தன்மை ஏற்படும். சுப செய்திகளால் சுப விரயங்கள் ஏற்படும். பெற்றோர்கள் பற்றிய கவலைகள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக, எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

சிம்மம்

வீட்டில் உள்ள பிள்ளைகளின் மூலம் உங்களுக்கு சுப செய்திகள் வந்து சேரும். நிர்வாகத்தில் உங்களுடைய பொறுப்புகள் அதிகரிக்கும். தொழிலில் லாபம் உண்டாகும். உங்களுடைய சாதுர்யமான பேச்சுத் திறமையால் பேரும் புகழும் உண்டாகும். பொது சுவைகளில் ஈடுபடுகிறவர்கள் எதிர்பார்க்காத திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆகாய நீலநிறமும் இருக்கும்.

கன்னி

உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து வந்த சின்ன சின்ன மனக்கசப்புகள் நீங்கி, நெருக்கமும் ஒற்றுமையும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு உங்களுடைய உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்ய வேண்டிய சூழல்கள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளமஞ்சள் நிறமும் இருக்கும்.

துலாம்

தேவையற்ற வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. முன்கோபத்தைத் தவிர்த்து கொஞ்சம் நிதானத்துடன் நடந்து கொள்ளுங்கள். சக ஊழியர்களை கொஞசம் அனுசரித்துச் செல்லுங்கள். அடுத்தவருடைய குறைகளைச் சுட்டிக் காட்டுடுவதை முதலில் நிறுத்துங்கள். கணவன் மனைவிக்கு இடையே சின்ன சின்ன சண்டைகள் தோன்றி மறையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

விருச்சிகம்

நீங்கள் எதிர்பார்த்ததை விடவும் அதிக தன வரவு ஏற்படும். நண்பர்கள் வட்டாரம் விரிவடையும். உங்களுடைய ஆடம்பரச் செலவுகளைக் கொஞ்சம் குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அவர்களுடைய மேலதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் வந்து போகும். நெருகுகமான நண்பர்களிடம் மனம் விட்டுப் பேசும் வாய்ப்புகள் உண்டாகும். மனதுக்குள் புதுப்புது எண்ணங்கள் தோன்றி மறையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

தனுசு

வியாபாரத்தின் மூலம் சில யுக்திகளைக் கற்றுக்கொள்ள முயற்சி செய்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள” உடன் பணிபுரிகின்ற சக ஊழியர்களுடைய ஆதரவைப் பெறுவார்கள். அக்கம் பக்கத்து வீட்டாரிடம் உங்களுக்கு இருந்து வந்த சின்ன சின்ன மனக்கசப்புகள் தீரும். உங்களுக்கு தொழிலிலும் வாழ்ககையிலும் இருந்து வந்த தடைகளை எதிர்த்துப் போராடுவீர்கள். பயணங்களின் மூலம் மனம் திருப்தி அடைவீர்கள். பழைய கடன்களை திருப்பி செலுத்துவது குறித்து சிந்தித்துக் கொண்டிருப்பீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருந்தது.

மகரம்

நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு பேரும் புகழும் உண்டாகும். கணவன், மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, நெருக்கம் அதிகரிக்கும். உங்களுடைய சிந்தனையின் போக்கில், கொஞ்சம் மாற்றம் ஏற்படும். நண்பர்களின் மூலமாக, உங்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். உங்களுடைய முழு அறிவுத் திறமையையும் வெளிப்படுத்துவார்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் மஞ்சள் நிறமும் இருக்கும்.

கும்பம்

பெற்றோர்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துவது நல்லது. வியாபாரத்தில் உங்களிடம் பணிபுரியும் வேலையாட்களால் உண்டான சின்ன சின்ன பிரச்னைகள் ஒரு முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் முக்கியப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு அவப்பெயர்கள் கூட வரலாம். கொஞ்சம் கவனமாக இருங்கள். மனதுக்குள் தோன்றும் புதிய எண்ணங்களை நடைமுறைப்படுத்துவதில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். நிர்வாகத் துறையில் இருப்பவர்களுடைய முழு திறமையும் வெளிப்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் இருக்கும்.

மீனம்

புதிய நபர்களுடைய அறிமுகங்கள் உங்களுக்கு உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களுடைய எண்ணங்களை அறிந்து அதை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் தன வரவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்களுடைய உழைப்புக்கு ஏற்ற பாராட்டுக்கள் வந்து குவியும். வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே நெருக்கங்கள் அதிகரிக்கும். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 9ம் அதிர்ஷ்ட நிறமாக ஊதாநிறமும் அதிர்ஷ்ட திசையாக மேற்கும் இருக்கும்.