சாப்புடுறத விட கஷ்டமான விஷயம் என்னென்னு பாத்திங்கன்னா நம்ம சாப்பிட்ட உணவு நல்லா ஜீரணம் ஆகாம இருக்கறது தாங்க.

ஒருத்தருக்கு ஜீரண சக்தி ஒழுங்கா இருந்தாலே போதுங்க, நம்ம உடல் உறுப்புகள் சீரா இயங்க ஆரம்பிச்சுடும்.

ஏனா உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை உணவுல இருந்து இந்த சீரான ஜீரணசக்தி மூலமாகத்தான் பெற முடியும்

ஒரு சிலருக்கு கல்லை சாப்பிட்டா கூட ஜீரணமாகிடும்னு சொல்வாங்க. சிலருக்கோ இது அப்படியே எதிர்மறையாக இருக்கும்.இவிங்க சாப்பிடா ஜீரணம் ஆகுமா , ஆகாதாங்குற பயத்துலயே சரியா சாப்பிடுறது கூட இல்லை.

இதனால மலச்சிக்கல், உடல் ஆற்றல் குறைதல், குடல் பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு , வயிறு மந்தம், வயிற்றெரிச்சல் ,வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் உண்டாகிறது.

அதுமட்டுமல்லாமல் இந்த ஜீரண பிரச்சனை உடல் எடையை கூட அதிகரிக்க ஆரம்பித்து விடும். உடல் எடை அதிகரிக்கும் போது எல்லாவித நோய்களும் நம்மை தொற்றிக்கொள்ளும். so , இத நாம அப்படியே கண்டுகொள்ளாம விட்டுடக்கூடாது.இந்த ஜீரண பிரச்சனைய சரி செய்ய இந்த 5 இயற்கை வழிகளை கையில எடுத்தாலே போதுங்க,எளிமையா சரி செஞ்சுடலாம்.

நன்றாக மென்று சாப்பிடுதல்

அவசர அவசரமா உணவை விழுங்காதீங்க.நல்லா உணவை வாயில போட்டு பற்களால மென்னு சாப்புடுங்க.இப்படி உணவு அரைபடும் போது இரைப்பைக்கு வேலை எளிமையா இருக்கும்.

நீர்ச்சத்து

நீர்ச்சத்து உங்க உடலுக்கு போதுமான ஈரப்பதத்தை கொடுக்கும்.so ,நாம சரியான அளவுல நீர் அருந்தி வரும்போது உடல்ல இருக்குற நச்சுக்கள் தான வெளியேறிடுது.காலைல எழுந்த உடனேயே வெறும் வயிற்றுல 4 டம்ளர் தண்ணி குடிக்கும் போது குடல்ல இருக்குற அழுக்குகள் எல்லாம் வெளியேறி, மலம் கழிக்க ஏதுவா அமையுது.

நார்ச்சத்துக்கள் அடங்கிய உணவுகள்

நார்ச்சத்துக்கள் அடங்கிய கீரைகளையும்,காய்கறிகளையும் அதிக அளவுல எடுத்துக்கனும்.இந்த நார்ச்சத்தானது நம்ம நரம்புகளோட செயல்பாட்டுக்கு மிகவும் முக்கியமான ஒன்னும் கூட .

நேரா நேரத்துக்கு சாப்பிடுங்கள்

சரியான நேரம் சாப்பிடுவது மிகவும் முக்கியமான ஒன்னுங்க.நேரா நேரத்துக்கு சரியா சாப்பிடாம இருந்தா ஜீரண பிரச்சனைகள் உண்டாகும்.இப்படி நேரம் தவறி சாப்பிடும் போது இரைப்பையில் சுரக்கும் அமிலங்களால அல்சர் உண்டாகும் அபாயமும் உண்டாகுது.

இரண்டையும் ஒரே நேரத்தில் சாப்பிடுவது

நம்மல்ல பெரும்பாலானோர் செய்யும் தவறுகள்ல ஒன்னு தாங்க இது. சாப்பிட்ட உடனே பழங்களை சாப்புடுறது.நம்ம உடம்பு சாப்பாட்டை ஜீரணிக்க எடுத்துக்கொள்ளும் நேரமும்,பழங்களை ஜீரணிக்க எடுத்துக்கொள்ளும் நேரமும் வெவ்வேறய்யா இருக்கு.so , இந்த ரெண்டையும் ஒன்னா சேத்து சாப்பிடும் போது அஜீரணக் கோளாறுகள் தான் உண்டாகுது.

அதுபோல பசித்தால் புசி என்ற பழமொழிக்கு ஏற்ப பசிச்சா மட்டுமே சாப்பிடும் பழக்கத்தை உண்டு பன்னிக்கோங்க.

முதல்ல சாப்பிட்ட உணவே சரியா ஜீரணமாகாத போது, மறுபடியும் மறுபடியும் சப்புடறது அஜீரணக் கோளாறுகளைத்தான் உண்டு பண்ணும்.

அதுபோல சாப்பிட்ட உடனே எக்காரணம் கொண்டும் தூங்கக்கூடாது.

இப்ப சொல்லப்பட்ட எல்லாத்தையும் சரியா கடைபிடுச்சாலே போதுங்க,அஜீரணக் கோளாறுகள் நீங்கி,மலச்சிக்கல் பிரச்சனைக்குற ஒன்னு நமக்கு எப்பவுமே ஏற்படாது.