மும்பை: குட்டை பாவாடை அணியும் பெண்களை பலாத்காரம் செய்யுமாறு கூறிய ஆன்ட்டியை கலாய்த்த கார்த்தி பட நடிகையை நெட்டிசன்கள் விளாசியுள்ளனர்.

டெல்லியில் உணவகம் ஒன்றுக்கு சென்ற பெண் குட்டை பாவாடை அணியும் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யுமாறு வாலிபர்களிடம் தெரிவித்த வீடியோ வெளியாகி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

இந்நிலையில் பாகுபலி, தோழா ஆகிய படங்களில் குத்தாட்டம் போட்ட நடிகை நோரா ஃபதேஹியோ அந்த பெண்ணின் மொழியை பற்றி கவலைப்பட்டுள்ளார்.

நோரா
ஆங்கிலம்
அந்த பெண் இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யுமாறு கூறிய வீடியோவை பார்த்த நோராவோ அவர் ஆங்கிலத்தை பலாத்காரம் செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார். நோராவுக்கு அந்த பெண் பேசிய விஷயம் பெரிதாகத் தெரியவில்லை, மொழி தான் தெரிந்துள்ளது.

நெட்டிசன்கள்
விளாசல்

ஏம்மா நோரா அந்த சீனியர் பெண் இளம் பெண்களை பற்றி தரக்குறைவாக பேசியது உங்களுக்கு தெரியவே இல்லையா, ஆங்கிலத்தை அவர் பலாத்காரம் செய்தது தான் பெரிய விஷயமோ என்று நெட்டிசன்கள் நோராவை விளாசியுள்ளனர்.

மொழி
பெருமை

நீங்கள் கனடாவை சேர்ந்தவர், ஆங்கிலம் நன்றாக பேசுவீர்கள். உங்களுக்கு ஆங்கிலம் நன்றாக வரும் என்பதால் இந்தியர்களை கலாய்ப்பதா. உங்களுக்கு சோறு போடுவது இந்தியா தான் என்கிறார்கள் நெட்டிசன்கள்.

இந்தியா
வேற்றுமை

இது ஒன்றும் கனடா இல்லை இந்தியா. இங்கு பல்வேறு மொழிகள் பேசப்படுகின்றன. அதனால் அனைவருக்கும் ஆங்கிலம் தெரியும் என்று எதிர்பார்க்க முடியாது என்று நெட்டிசன்கள் நோரா ஃபதேஹியை வறுத்தெடுத்துள்ளனர்.