சென்னை: இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக சென்னை பூந்தமல்லியில் தங்கியிருந்த மூன்று பேரிடம் என்ஐஏ சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தியது.

கடந்த 21-ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகையின் போது இலங்கையில் தற்கொலை படை தாக்குதலால் 350-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

மேலும் நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் இலங்கையில் ஊடுருவியுள்ளதால் இந்தியாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மண்ணடி
குடியிருப்பு

இந்த நிலையில் தேசிய புலனாய்வு பிரிவினர் சென்னை மண்ணடியை சேர்ந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் அளித்த தகவலின்படி சென்னை பூந்தமல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றனர்.

இலங்கை
மூவர்

அங்கு தங்கியிருந்த இலங்கையைச் சேர்ந்த மூன்று பேரிடம் விசாரணை நடத்தினர். சுமார் 6 மணி நேர விசாரணைக்கு பிறகு அவர்கள் மூவரையும் ஒரு காரில் அழைத்து சென்றனர்.

குடியிருப்பு
வீடு

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த குடியிருப்பில் 30 ஆயிரம் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். தேசிய புலனாய்வு அமைப்பினர் அந்த வீட்டிலிருந்து முக்கிய ஆவணங்கள், பென் டிரைவ், ஹார்ட் டிஸ்க் ஆகியவற்றை கைப்பற்றினர்.

பெண்கள்
பாதுகாப்பு

குறிப்பிட்ட அந்த வீட்டில் 3 பெண்களும் ஒரு குழந்தையும் இருந்ததாக தகவல்கள் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் தற்கொலை படையினர் தாக்குதல் நடத்த தீவிரவாத அமைப்புகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்ததால் தமிழகம், கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.