பிரபல சின்னத்திரை நடிகையான தேவிப்பிரியா சின்னத்திரையில் நடித்து மக்களிடையே பிரபலமானவர். இவர் சின்னத்திரையில் நீண்டகாலமாக நடித்துவருகிறார். மேலும் இவர் பல படங்களில் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் அதிகம் பணியாற்றியுள்ளார். சீமராஜா திரைப்படத்தில் சிம்ரனுக்கும், புதுப்பேட்டை படத்தில் நடிகை சினேகாவுக்கும், தாமிரபரணி’ படத்தில் நடிகை நதியாவிற்கும் டப்பிங் கொடுத்து இவர் மிகவும் பிரபலமானார்.

இந்நிலையில் இவருக்கு திருமணம் ஆகி சங்கர் என்ற கணவர் இருக்கிறார். இந்த நிலையில் நடிகை தேவிக்கும் துணை நடிகர் ரவி என்பவருக்கும் இடையே பழக்கம் வந்தது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. விஷயம் தெரிந்த தேவியின் கணவர் சங்கர், மனைவியை கண்டித்துள்ளார். இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவர் ரவியுடனான உறவை தேவி துண்டித்து கொண்டார்.

தற்போது இந்த நிலையில் கொளத்தூரில் இருக்கும் தேவியின் சகோதரி லட்சுமியின் வீட்டுக்கு சென்ற ரவி, குடிபோதையில் தகராறு செய்திருக்கிறான். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த நடிகை தேவி அவரது கணவர் சங்கர், தேவியின் சகோதரி மற்றும் அவரின் கணவர் சவரியார் ஆகியோர் ரவியை உருட்டுக் கட்டை மற்றும் சுத்தியலால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த ரவி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.