அஜித் ரசிகர்களால் மறக்கவே முடியாத இந்த நாள் என்ன ஸ்பெஷல் தெரியுமா?

அஜித் நடித்த படங்களில் ரசிகர்களால் மறக்கவே முடியாத ஒரு படம் மங்காத்தா. வெங்கட் பிரபு இயக்கிய இப்படம் அஜித்திற்கு 50வது படம், ரசிகர்களுக்கு மாஸ் படமாகவும் அமைந்துவிட்டது. அதுவும் தன்னுடைய 50வது படத்தின் அஜித் வில்லனாக நடித்தது எல்லோராலும் வரவேற்கப்பட்டது.

இதுபோக யுவன் ஷங்கர் ராஜா சொல்லவே தேவையில்லை, அஜித்திற்கு எப்படி ஒரு மாஸ் இசை கொடுக்க வேண்டும் என்பதை அறிந்திருப்பவர். இப்படம் வெளியாகி இன்றோடு 7 வருடங்கள் ஆகின்றது.

இதனை கொண்டாடும் விதமாக வழக்கம் போல் அஜித் ரசிகர்கள் #HappyMankathaDay #7YearsOfMankatha போன்ற டாக்குகளை டிரண்ட் செய்து வருகின்றனர்.