யாஷிகா-ஐஸ்வர்யா படுக்கையில் மஹத் செய்தது குறித்து சிம்பு அதிரடி பதில்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி ஆரம்பித்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. வார நாட்களை விட சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை டிஆர்பி அதிகமாக இருப்பதாக நிறைய தகவல்கள் வருகின்றன.

நிகழ்ச்சியில் ஒருநாள் இரவு மஹத், யாஷிகா-ஐஸ்வர்யா படுக்கையில் அவர்களுக்கு நடுவில் போய் படுத்துக் கொண்டார். அவரின் அந்த செயலுக்கு மோசமான விமர்சனங்கள் வந்தன.

இந்த நேரத்தில் சிம்பு இதுபற்றி கூறுகையில், நான் நிகழ்ச்சியை பார்க்கவில்லை, புகைப்படமும் கமல்ஹாசன் சார் அவர்கள் அதை காட்டி கேட்ட நிகழ்ச்சியும் பார்த்தேன்.

வெளியில் எனக்கு காதலி இருக்கிறாள் என்று கூறிவிட்டு அவன் அப்படி செய்கிறான் என்றால் ஏதோ அவன் விளையாடுகிறான் என்பது தெரிகிறது என்றார்.

Subscribe to my YouTube Channel