பிக் பாஸ் மேடையில் கமலை பார்த்தது போல் இந்த மேடையில் கமலை பார்த்திருக்கிறீர்களா

கமல்ஹாசன் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசனான இந்த இரண்டாம் சீசனை தொகுத்து வழங்கிவருகிறார். வார வாரம் அவரின் வருகையையும், பேசும் விதத்தையும், ஆளுமையையும் பார்க்கவே ரசிகர்கள் அதிகம் விரும்புகிறார்கள்.

பல படங்களில் நடித்து உலக நாயகன் என பெயர் எடுத்த அவருக்கு இந்த தொலைக்காட்சி மேடை புதிதானாலும் பிரத்யேகமானது தானே. அவரின் இதன் மூலம் தன் அரசியல் விதையையும் மக்கள் மனதில் விதைத்து விட்டார்.

அவர் இனி ஓரிரு படங்களுக்கு பிறகு நடிப்பதை தவிர்க்க போவதாக அறிவித்துவிட்டார். ஆனாலும் அவர் தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என்பது ரசிகர்கள் விருப்பம்.

இந்நிலையில் அவரின் விஸ்வரூபம் 2 படம் வரும் ஆகஸ்ட் 10 ம் தேதி வெளியாகவுள்ளது. இதற்காக அவர் விளம்பரத்தில் இறங்கியுள்ளார்.

இப்படத்திற்காக பாலிவுட்டில் பிரபல டிவி நிகழ்ச்சியான டஸ் கா டும் சீசன் 3 ல் நேற்று பங்கேற்றுள்ளார். பிரபல நடிகர் சல்மான் கான் இதை தொகுத்து வழங்குகிறார்.

ஹிந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதும் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe to my YouTube Channel