தளபதி62 கதை முதலில் நடிக்கவிருந்த ஹீரோ யாருன்னு தெரியுமா

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் தளபதி62. இந்த படத்தின் 85% பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், சென்னை சன் தொலைக்காட்சி அலுவலகத்தில் தற்போது சில காட்சிகளை படமாக்கி வருகிறார்கள்.

தீபாவளிக்கு வெளியாகவுள்ள இந்த படத்திற்கு பிரமாண்டமாக பொருட்செலவு செய்து வருகின்றது சன் பிக்சர்ஸ். இந்நிலையில், இந்த படத்தின் கதை நடிகர் விஜய்க்கு எழுதப்பட்டது கிடையாது என்ற தகவல் வந்துள்ளது. ஆம், இந்த கதையை சூப்பர் ஸ்டார் ரஜினியை மனதில் வைத்துதான் எழுதியுள்ளார் இயக்குனர் முருகதாஸ்.

கபாலி படத்தின் ரிலீசுக்கு முன்பே முருகதாஸ் ரஜினியை சந்தித்து இந்த கதையை கூறியுள்ளார். முதலில் நடிக்கிறேன் என்று ஒப்புக்கொண்ட ரஜினி, முருகதாஸ் கொடுத்த ஸ்பைடர் படத்தை பார்த்த பிறகு சில காரணங்களை சொல்லி தட்டிக்கழித்திருக்கிறார்.

ஆனால், இக்கட்டான சூழ்நிலையில் தனக்கு இரண்டு ப்ளாக்பஸ்டர் படங்களை கொடுத்தவர் முருகதாஸ். சமீபத்தில், அகிரா, ஸ்பைடர் என தொடர்ந்து இரண்டு தோல்வி படங்களை கொடுத்தால் தாறுமாறாக அடிவாங்கி இக்கட்டான சூழ்நிலையில்மாட்டியுள்ளார் என்பதற்காக இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் தளபதி.

முருகதாஸும் தன்னுடைய இமேஜை காப்பற்றிகொள்ள 24X7 ஓய்வின்றி உழைத்துக்கொண்டிருக்கிறார் தளபதி62 படத்தின் வெற்றிக்காக.

Subscribe to YouTube Channel