தமிழ் ராக்கர்ஸ் உருவாக முக்கிய காரணமே இவரு தானுங்க நல்லா பாத்துக்கோங்க

இவரு மட்டும் இல்லன்னா.. தமிழ் ராக்கர்ஸ் எல்லாம் உருவாகியே இருக்க மாட்டாங்க…
சினிமாவை நமது வாழ்வில் இருந்து பிரிப்பது மிகவும் இன்றியமையாத காரியம். முக்கியமாக இந்தியாவில் சினிமா என்பது தனி கலாச்சாரமாக பார்க்கப்படுகிறது. சினிமா நமது வாழ்வில் ஒரு அங்கமாக மாறிவிட்டது. அதன் காரணமாகவே நாம் சில நடிகர்களை கடவுள் போல கண்ட வரலாறும் காண முடிகிறது. அரசியல் தலைவராக உருவெடுத்து சில மாநிலங்களை ஆண்டவர்கள் சினிமா நட்சத்திரங்கள்.

இன்றும் பல சினிமா பிரபலங்கள் மக்களவை உறுபினர்களாக பதவி வகிப்பதை நம்மால் காண இயலும். ஏன் தமிழ்நாட்டில் அரசியலில் ஈடுபட்டு வரும் கலைஞர், சீமான், கமல், இனிமேல் களம் புகவிருக்கும் ரஜினி வரை பலர் சினிமா பிரபலங்கள். மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்களும் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் தான்.

இப்படிப்பட்ட சினிமாவை இந்தியாவிற்கு அறிமுகம் செய்து வைத்த மாமனிதர் குறித்து தான் இந்த கட்டுரை மூலம் நாம் அறிந்துக் கொள்ளவிருக்கிறோம்….

துண்டிராஜ்!
துண்டிராஜ் கோவிந்த் பால்கே என்பது இவரது இயற்பெயர். இந்திய சினிமாவின் தந்தை, இந்தியாவிற்கு சினிமாவை அறிமுகம் செய்து வைத்த மேதை. மிக சிறிய வயதில் இருந்தே இவருக்கு இயற்கை மீதும், அதை கலை வடிவத்தில் வெளிப்படுத்துவதிலும் ஆர்வம் பெருகி காணப்பட்டது. இவர் கலையை படித்தவர். புகைப்படக் கலைஞராக, வரைவாளராக, பிரிண்டிங் தொழில் உட்பட பல்வேறு வேலைகளை செய்தவர்.

மனைவியுடன் சண்டை!
ஒரு நாள் தாதாசாஹேப் பால்கேவிற்கும் அவரது மனைவிக்கும் சண்டை ஏற்பட்டது. அந்த சண்டை தான் இவரது வாழ்வில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. சண்டையின் விளைவாக இவர் வீட்டை விட்டு வெளியேறி ஒரு திரையரங்குக்கு சென்றார்.

அங்கே ஒரு ஊமை படத்தை பார்த்துக் கொண்டிருந்தார். அது தாதாசாஹேப் பால்கேவினுள் பெரும் தாக்கத்தை உண்டாக்கியது. தானும் ஒரு சினிமாக்காரனாக வேண்டும் என்ற தாக்கத்தை, உத்வேகத்தை தாதாசாஹேப் பால்கேவிற்கு ஏற்படுத்தியது அந்த ஊமை படம்.

புராணக் கதைகள்!
சினிமா என்றவுடன் குருட்டுத்தனமாக தாதாசாஹேப் பால்கே களம் இறங்கவில்லை. இந்திய புராண கதாபாத்திரங்களை திரைப்பதிவு செய்யவேண்டும் என்ற மூலக்காரணம் கொண்டிருந்தார் தாதாசாஹேப் பால்கே. இந்திய வரலாற்றில் முதல் திரைப்படமாக வெளியானது ராஜா ஹரிச்சந்திரா. இது ஒரு பெரும் மைல்கல். தொடர்ந்த தாதாசாஹேப் பால்கேவின் அயராத முயற்சிகள் மற்றும் கடின உழைப்பின் காரணாமாக இந்திய சினிமாவின் அஸ்திவாரம் வலிமையாக அமைந்தது.

சினிமா என்பது வெறும் கேளிக்கை மட்டுமல்ல. அது ஒரு கலாச்சாரத்தை பதிவு செய்யும் ஊடகம். அதன் மூலம் லாபமும் பார்க்க முடியும் என்பதை நிரூபிக்க வேண்டும் என்று கருதினார் தாதாசாஹேப் பால்கே. இவரது கடினமான உழைப்பு மற்றும் ஊக்கம் காரணமாக தான் இன்று உலக சினிமா அரங்கில் இந்தியா ஒரு தனி இடம் பிடித்திருக்கிறது.

தனி மனிதனால்…
தாதாசாஹேப் பால்கே எனும் ஒற்றை மனிதனால் தான் இந்திய சினிமா உருவானது என்றால் அது மிகையாகாது. இவரை சிறப்பிக்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் இந்திய அரசு இந்திய சினிமாவில் பெரும்பங்காற்றிய நபர்களுக்கு, சாதனையாளர்களுக்கு தாதாசாஹேப் பால்கே விருது அளித்து கௌரவித்து வருகிறது. இந்திய சினிமாவின் உச்சபட்ச விருதாக இது கருதப்படுகிறது.

மும்பை!
மும்பையில் ஒரு மராத்தி பிராமின் குடும்பத்தில் பிறந்தவர் தாதாசாஹேப் பால்கே. இவர் 1870, ஏப்ரல் 30ம் நாள் பிறந்தார். இவரது அப்பா ஒரு சமஸ்கிரத பண்டிதர். இவர் தனது ஆரம்ப கல்வியை சர். ஜேஜே. ஸ்கூல் ஆப் ஆர்ட்ஸ் என்ற பள்ளிக் கூடத்தில் படித்தார். 1890ல் தாதாசாஹேப் பால்கே பரோடாவின் கலா பவனில் சேர்ந்தார். இவர் சிற்பம், ஓவியம், மற்றும் புகைப்படம் எடுத்தல் போன்ற கலைகளை கலா பவனில் பயின்றார்.

கோத்ராவில் ஒரு புகைப்பட கலைஞராக தனது வேலையை துவக்கினார் தாதாசாஹேப் பால்கே. பிறகு பிரிண்டிங் பிரஸ் துவக்கினார். இவர் ஜெர்மனிக்கு பயணம் மேற்கொண்டு அப்போதைய லேட்டஸ்ட் பிரிண்டிங் தொழில்நுட்பத்தை கற்றுக் கொண்டார். அதே நேரத்தில் இவர் ராஜா ரவி வர்மாவிடம் வேலை செய்ததாகவும் அறியப்படுகிறது. இவர் இந்தியாவின் சிறந்த ஓவியர் ஆவார்.

தி லைப் ஆப் கிரிஸ்ட்
தி லைப் ஆப் கிரிஸ்ட் என்ற ஊமைப் படத்தை பார்த்த பிறகே, இந்திய புராணங்கள் மற்றும் கடவுள்களை திரையில் கொண்டு வர வேண்டும் என்ற ஆர்வம் இவருக்குள் அதிகரித்தது. அந்த படத்தை கண்ட பிறகு சிறிதளவு பணத்தை கடன் வாங்கி கொண்டு ராஜா ஹரிஷ்சந்திரா என்ற படத்தை எடுத்து 1912ல் வெளியிட்டார் தாதாசாஹேப் பால்கே.

1913ல் மும்பை கோரோநேஷன் சினிமாவில் இதை திரையிட்ட போது மக்களால் அதை நம்பவே முடியவில்லை. இந்த படத்திற்காக நல்ல வரவேற்பு பெற்றார் தாதாசாஹேப் பால்கே.

கடைசி நாட்கள்…
மோகினி பாச்மசூர், சத்யவான் சாவித்திரி , லங்கா தஹன், ஸ்ரீ கிருஷ்ண ஜென்மா, புத்த தேவ், கங்கா வதரன் போன்ற பல படங்கள் தொடர்ந்து எடுத்தார் தாதாசாஹேப் பால்கே. ஊமைப் படங்கள் மூலம் லாபம் ஈட்ட முடியும் என்பதை அறிந்தார். பிறகு ஹிந்துஸ்தான் பிலிம்ஸ் என்ற சினிமா கம்பெனி ஆரம்பித்தார். இந்த நிறுவனத்தில் இவருடன் ஐந்து தொழிலதிபர்கள் உரிமையாளர்களாக சேர்ந்திருந்தனர்.

ஆனால், சில காலத்திற்கு பிறகு சினிமா இவருக்கு எதிர்பார்த்த லாபத்தை அளிக்காமல் போனதால் கம்பெனியில் இருந்து வெளியேறினார். தனது 19 வருட சினிமா பயணத்தில் 95 படங்கள், 26 குறும்படங்கள் இவர் எடுத்ததாக அறியப்படுகிறது. 1944 பிப்ரவரி 16 அன்று தனது 73 வயதில் பாம்பேவில் இயற்கை எய்தினார் தாதாசாஹேப் பால்கே.