தன்னை கற்பழித்த காமுகனுக்கு பெண் கொடுத்த சவுக்கடி பதில்

அறிவியல் பார்வைக்கு பதில் ஆணவப் பார்வையும், இச்சை பார்வையும் இருக்கும் வரை இந்த சமுதாயத்தில் பெண்பாதுகாப்பு என்பது கானல் நீராக தான் இருக்கும்.

பெண் என்பவள் பிறப்பதில்லை. உருவாக்கப்படுகிறாள் என்று பிரஞ்சு தத்துவம் ஒன்று உள்ளது. உண்மையில் பெண் குழந்தையாகப் பிறந்தாலும், அவள் இந்தச் சமூகத்தில் பெண்ணாக வளர முடிவதில்லை.

இந்தச் சமூகம் அவளை வளர விடுவதில்லை. பெண் குழந்தை என்று தெரிந்துவிட்டால் அக்குழந்தையைக் கொன்றுவிடும் நிலைமை இப்போதும் உலகெங்கிலும் பரவலாக உள்ளது.

ஒருவேளை அந்தப் பெண் குழந்தை, கொலையிலிருந்து தப்பித்து, பருவ வயதை அடைந்துவிட்டால், பலரின் கண்கள் அப்பெண்ணின் உடலைத் துளைக்கும்.

ஒரு தலை காதலால் ஆசிட் வீச்சு, ஆணவக்கொலைகள், வரதட்சணைக் கொடுமைகள், சட்டத்தில் ஆண்களுக்கு இணையான சமஉரிமை இல்லாமை என இப்படிப் பிறப்பு முதல் இறப்பு வரை இப்பூமியில் வாழ்வதற்கு தினம் தினம் ஒரு வேள்வித்தீயில் பெண்கள் எரிந்து கொண்டே இருக்கிறார்கள்.

பெண்கள் அதிகமாகப் பாதிக்கப்படுவது பாலியல் ரீதியாகத்தான் என்று அனைத்து நாடுகளின் கணக்கெடுப்புகளின் முடிவுகளும் சொல்லுகின்றன.

பெண்களை போதைப் பொருளாக நினைக்கும் மிருகத்தனமான மனிதர்களுக்கு இக்கதை…

சரி கதைக்கு செல்வோம்,

உடல்நிலை சரியில்லாத 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை மருத்துவமனை அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வந்தது.

அதில், ஓட்டுநராக வந்திருந்த ஆண் ஒருவர், பெண்ணை மிகவும் அன்போடு அழைத்து ஆம்புலன்ஸில் அமரவைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்தில் ஆம்புலன்ஸ் நிற்க, ஓட்டுநர் இறங்கி வந்து அந்த பெண்ணிடம் தனது சில்மிஷ வேலையை ஆரம்பித்துள்ளார்.

அப்போது தான், அந்த பெண்ணுக்கு தெரிய வருகிறது, ஓட்டுநர் ஒரு காமுகன் என்பது, அவளோ உடல்நிலை சரியில்லாதவளாயிற்றே, ஓட்டுநரின் இச்சை செயல்களை தடுக்க முடியாமல் ஆசைக்கு இணங்கவே ஓட்டுநர் அதை சாதகமாய் பயன்படுத்திக் கொண்டு மீண்டும்,மீண்டும் அவளை வேட்டையாடினான்.

இறுதியில், நான் எவ்வளவோ பெண்களிடம் இவ்வாறு பழகியுள்ளேன், ஆனால் அவர்களெல்லாம் நோயுற்றவர்கள்.. நீ இவ்வளவு அழகாக இருக்கிறாயே உனக்கு என்ன நோய் என்று கேட்க, அப்பெண் அமைதியாக இருந்தாள்.

ஆனால், அந்த ஓட்டுநர் விடாது, மீண்டும் மீண்டும் சீண்டி மிரட்டி கேட்க, அப்போது அந்த பெண் கூறிய ஒற்றை வார்த்தையில் அவன் அதிர்ந்து உடல் நடுங்க ஆரம்பித்து விட்டது.

ஆம், அப்பெண் அமைதியாக, எனக்கு எயிட்ஸ் என்று கூறியுள்ளார்.

இறுதியில், இச்சொல் அந்த ஓட்டுநரின் உயிரையும் எடுத்துவிட்டது. ஆம் அவன் பயத்திலேயே உயிரை விட்டு விட்டான்.

Subscribe to my YouTube Channel