தனது தாய் இறுதிச்சடங்கில் மகன் எடுத்த முக்கிய முடிவு

மதுரை மாவட்டத்தில் தாயார் இறந்த துக்கம் தாங்க முடியாமல் மகள் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவாஜி செல்வரங்கன் (58) என்பவர் தனது தாயின் மீது அதிக பாசம் கொண்டவர். இவரது தந்தை இறந்து 30 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் தனது தாய் தனலட்சுமிதான் பிள்ளைகளை தனியாக இருந்து வளர்த்துள்ளார்.

இதன் காரணத்தினாலேயே 3 பிள்ளைகளில் மூன்றவாது மகனான சிவாஜி செல்வரங்கனுக்கு தனது தாயின் மீது அதிக பாசம்.

இந்நிலையில், தனலட்சுமி உடல்நலமில்லாமல் ஞாயிறு காலையில் இறந்தார். இவருடைய இறுதிச்சடங்குகளை உறவினர்கள் கவனித்துக் கொண்டிருந்தபோது, தாயார் இறந்த சோகத்தை தாங்க முடியாமல் புலம்பிக்கொண்டிருந்த சிவாஜி செல்வரங்கன் விஷம் குடித்து நேற்று தற்கொலை செய்து கொண்டார்.

தாயின் இறுதி சடங்கின் போதே விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதால், இவரது உடலும் ஒன்றாக அடக்கம் செய்யப்பட்டுள்ளது.