சினேகனால் கடுப்பான பிக் பாஸ் பெண் போட்டியாளர் என்ன செய்தார் தெரியுமா

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஜூன் மாதம் இதே நாள் தொடங்கியது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி தற்போது 30 நாட்களை கடந்து விட்டது. வார இறுதி தான் கலை கட்டுகிறது.

இந்நிலையில் இந்த வீட்டில் முன்னாள் சீசனின் போட்டியாளரும் வெற்றியாளருமான கவிஞர் சினேகன் மீண்டும் சிறப்பு வருகை தருகிறார். வீட்டில் உள்ள அனைவரும் தமிழ் வகுப்பு எடுக்கிறார்.

ஒவ்வொருவருக்கும் தமிழில் சில திருக்குறளை சொல்லச் சொல்ல ஷாரிக் தடுமாறுகிறார். மேலும் வைஷ்ணவி யாகாவார் ஆயினும் நாகாக்க என குறளை சொல்லி விளக்கம் கொடுக்கிறார்.

அதற்கு சினேகன் நா ( நாக்கு) ஐ கண்ட்ரோல் பண்ணனும் என சொல்லி எல்லோருக்கும் புரியும் என நினைக்கிறேன் என கூற மற்றவர்கள் சிரிக்கிறார்கள். இதனால் வைஷ்ணவி கோபமாக மேடையை விட்டு இறங்குகிறார்.

Subscribe to my YouTube Channel