கோலிவுட்டில் இவங்க தான் சார் பெரிய ஹீரோக்கள் என்று முதலில் யாரை சொன்னார் தெரியுமா

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமா ரசிகர்களின் செல்ல நாயகனாக வலம் வருகிறார். அவரது படங்கள் குடும்பத்துடன் சேர்ந்து பார்க்கும் அளவிற்கு மிகவும் ஜாலியாக சில படங்களில் கருத்தும் இருக்கும்.

இவர் இன்று நடைபெற்ற ஒரு குப்பக் கதை படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். தினேஷ் மாஸ்டர் நடித்திருக்கும் இப்பட விழாவில் சிவகார்த்திகேயன் பேசும்போது, நான் சின்ன நடிகராக இருந்த போது தினேஷ் மாஸ்டர் அவர்கள் எனக்கு நடனம் அமைக்க ஒப்புக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது என்னுடைய கடமை. நான் நடிக்க வரும்போது நான் ஹீரோ என்ற எண்ணம் இல்லை, ஒரு கதையின் லீட் நடிகர் என்பது மட்டும் தான் இருந்தது. அஜித், விஜய், ரஜினி மட்டுமே ஹீரோ என்ற இமேஜுக்கு தகுந்தவர்கள் என்று பேசியுள்ளார்.

Subscribe to YouTube Channel