காதல் என்ற பெயரில் அரங்கேறிய இந்த கேவலத்தை பாருங்க

பள்ளி மாணவியை கடத்திச் சென்று மது, கஞ்சா கொடுத்து வெவ்வேறு இடங்களில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக 6 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். இதில் மேலும் 15 வாலிபர்களுக்கு தொடர்பு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் நகரை சேர்ந்தவர் 10ம் வகுப்பு மாணவி. இவரை காதலிப்பது போல நடித்து, அவரை அழைத்துச் சென்ற இளைஞர் ஒருவர் கஞ்சா, மது வாங்கிக்கொடுத்து வெவ்வேறு இடங்களில் வைத்து, வெவ்வேறு நாட்களில் பலாத்காரம் செய்துள்ளனர்.

இவர்கள் திருவள்ளூரை சேர்ந்த ராஜேஷ், தலக்காஞ்சேரி கிராமத்தை சேர்ந்த நவீன்குமார் ஆகியோர் என தெரியவந்துள்ளது..

இதைத் தொடர்ந்து தங்களது நண்பர்களான தலக்காஞ்சேரி கார்த்திக், அருண்குமார் காக்களூர் கமல் என்ற ராஜ்கமல், திருவள்ளூர் மகேஷ் ஆகியோரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்களும், மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளனர்.

இது குறித்த புகாரின்பேரில் பொலிசார் கார்த்திக் உள்பட 6 பேரை போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மாணவியிடம் நடத்திய விசாரணையில் மது, கஞ்சா கொடுத்து 21 வாலிபர்கள் கற்பழித்ததால் உடல் மற்றும் மனநிலை பாதித்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும், தலைமறைவான 15 வாலிபர்களை இரண்டு தனிப்படை பொலிசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்

Subscribe to YouTube Channel