கமலிடம் நியமில்லாத பேச்சு கமலை எதிர்த்து நின்ற காயத்ரி ரகுராம்

பிக்பாஸின் முதல் சீசன் மூலம் பிரபலமானவர் காயத்ரி ரகுராம். மேலும் அந்த நிகழ்ச்சியால் அவரது பெயர் கொஞ்சம் டேமஜும் ஆனது. இந்நிலையில் தற்போது அந்நிகழ்ச்சியின் இரண்டாம் சீசன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதில் சில நாட்களுக்கு முன்பு புகைப்பிடித்தலை பற்றி கமல் தனது கருத்துக்களை கூறினார். இதற்கு பார்வையாளர்கள் மத்தியில் பாராட்டுகள் கிடைத்தாலும் காயத்ரி ரகுராமிடம் இருந்து கண்டன குரல் கிடைத்துள்ளது.

ஏனென்றால் கமல் அதில், ’ஆணுக்கு நிகராக பெண்கள் புகைப்பிடிப்பதால் சிறந்தவர்களாகிவிட முடியாது’ என கூறியிருந்தார். இதற்கு காயத்ரி ரகுராம், ‘ஆண்களை போலவே பெண்களும் புகைப்பிடிப்பது அவர்களின் விரக்திக்காகவே தான், இது போலி’ என கமலின் கூற்றை பொய் என்பது போல் கூறியுள்ளார்.

இதனால் காயத்ரிக்கு பல தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.

 

Subscribe to my YouTube Channel