ஏங்க யாராவது என் பொண்டாட்டிய நித்யனந்தாவிடம் இருந்து காப்பாத்தி குடுங்க கணவன் கதறல்

நித்தியானந்தா ஆஸ்ரமத்திலிருந்து தன் மனைவியை மீட்க ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துவந்து மனு அளித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் வடுகம் முனிப்பம்பாளையத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. விவசாயியான இவர் இன்று ஆட்சியர் அலுவலகம் வந்து மனு ஒன்றை அளித்துள்ளார்.

அந்த மனுவில், 8 மாதங்களுக்கு முன் பெங்களூரில் உள்ள நித்தியானந்தா ஆஸ்ரமத்திற்குச் சென்ற தன் மனைவி இன்று வரை வீடு திரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும், மனைவியின் பெயரில் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் அவதிப்படுவதாகவும் உடனே தன் மனைவியை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்தார்.

நித்தியானந்தா ஆஸ்ரமத்தில் பல பெண்கள் உள்ளனர். அதில் தான் மனைவி உள்ளார் அவரை மீட்டு தருமாறு மனு அளித்துள்ளார்.

Subscribe to YouTube Channel