இன்றைய ராசிபலன்

நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசி பலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள். அப்படி இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என்பதை பார்க்கலாம்.

மேஷம்
புதிதாக வேலைபவர்குளுக்கு வீண் அலைச்சல்கள் உண்டாகும். எந்தவொரு செயலையும் நிதானமாக செய்து முடிக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. சொந்த ஊருக்கு பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழல் உருவாகும். அறிமுகம் இல்லாத புதிய நபர்களிடம் பேசும்போது கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

ரிஷபம்
கடல்வழிப் பயணங்களின் மூலமாக லாபங்கள் வந்து சேரும். பொது காரியங்களில் ஈடுபடுகிறவர்களுக்கு குடும்ப உறுப்பினர்களுடைய ஆதரவுகள் பெருகும். பெரிய பெரிய மகான்களுடைய தரிசனங்கள் கிடைக்கும். தொழில் பங்குதாரர்களிடம் தேவையில்லாத வாக்கு வாதத்தைத் தவிர்ப்பது நல்லது. பொன், பொருள் சேர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். சுப செய்திகள் வந்து சேரும். இன்ற உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் இருக்கும்.

மிதுனம்
பொது நலத்துக்காக உங்களுடைய நேரத்தை செலவு செய்வீர்கள். அதில் மன திருப்தியும் அடைவீர்கள். மற்றவர்களிடத்தில் உங்களுக்கான மரியாதை அதிகரிக்கும். தந்தையின் வழியிலான சொத்துக்களில் இருந்து வந்த சிக்கல்கள் குறையும். வெகு நாட்களாக உங்களுக்கு இருந்த பிரச்னை ஒன்றை மிகவும் நிதானத்துடன் பேசி முடிப்பீர்கள். மனதுக்குள் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கி, புத்துணர்ச்சி பெறுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மயில் நீலநிறமாக இருக்கும்.

கடகம்
தொழிலில் முக்கிய பிரதிநிதி ஒருவருடைய அறிமுகம் கிடைக்கும். நீங்கள் பணிபுரியும் நிறுவனங்களில் தலைமைப் பொறுப்புக்கான முயற்சிகள் ஈடேறும். பொன், பொருள் சேர்ப்பதற்கான திட்டங்களைத் தீட்டுவீர்கள். நண்பர்களின் மூலமாக தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு பொருளாதாரம் உயரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம்அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கிறது.

சிம்மம்
வேலை தேடுகிறவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். உடல் நலத்தில் ஏற்பட்ட பல பிரச்னைகளும் தீர்ந்து உடல் நலம் தேறும். நீங்கள் எதிர்பார்த்திருந்த கடன் உதவிகள் கைக்கு வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை அதிகமாக இருந்தாலும் அதனால் மேன்மையான சூழலுமு் உயர் அதிகாரியின் பாராட்டும் கிடைக்கும். சொத்து பிரிவினையின் போது, சொத்து பங்குதாரர்களான பங்காளிகளிடம் கொஞ்சம் நிதானமாக நடந்து கொள்ளுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

கன்னி
அரசு அதிகாரிகளின் வாயிலாக உங்களுக்குச் சாதகமான சூழல்கள் உருவாகும்.. பரம்பரை சொத்துக்களின் மூலமாக லாபம் உண்டாகும். நீங்கள் செய்யும் புண்ணிய காரியங்களுக்காக உங்களைத் தேடி பாராட்டுக்கள் வந்து குவியும். வீட்டில் குழந்தைகளின் மூலமாக சுப விரயச் செலவுகள் உண்டாகும். உயர் கல்வி பயில்கின்ற மாணவர்களுடைய முயற்சிகள் வெற்றி பெறும். இளைஞர்களுக்கு சாதகமான நாளாக அமையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

துலாம்
உலகளாவில வாணிகத்தில் நீங்கள் எதிர்பார்த்ததை விடவும் அதிகமாகவே பலன்கள் உங்களுக்குக் கி்டைக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். போட்டிகளில் உங்கள் பக்கமே வெற்றி இருக்கும். பெற்றோருடுன் தேவையில்லாத விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. உயர் அதிகாரிகளிடம் கொஞ்சம் பொறுமையாக நடந்து கொள்ளுங்கள். கல்வி சம்பந்தப்பட்ட துறையில் உள்ளவர்களுக்கு மேன்மைகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண 7 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

விருச்சிகம்
கடிதங்களி்ன வழியிலாக உங்களுக்கு மிகவும் அனுகூலமான நிலைகள் ஏற்படும். நீங்கள் மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறுவதில் கொஞ்சம் கால தாமதங்கள் ஏற்படும். உடன் பிறந்த சகுாதர சகோதரிகளின் உதவியினால் மகிழ்ச்சியான செய்திக்ள உங்களைத் தேடி வந்து சேரும். புதிதாகத் தொழில் தொடங்கும் திட்டம் உள்ளவர்களுக்கு அவற்றுக்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

தனுசு
முன் பின் தெரியாத புதிய நபர்களின் ஆதரவினால் உங்களுக்கு பண வரவுகள் உண்டாகும். எந்த காரியமாக இருந்தாலும்அதற்கு உங்களுடைய குடும்ப உறுப்பினர்களுடைய முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். உங்களுடைய பேச்சுத் திறமையினால் பொருள் சேர்க்கை உண்டாகும். வாகனங்களை முதலீடாகக் கொண்ட தொழில் தொடங்குபவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் உண்டாகும். கணவன், மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, நெருக்கம் அதிகரிக்கும். .இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் இருக்கும்.

Subscribe to my YouTube Channel