இன்றைய ராசிபலன் இதோ

ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்ததும் சிலருக்கு காபியில் தொடங்கும். சிலருக்கு செய்தித்தாளில் ராசிபலன் பார்த்த பின்பு தான் எல்லாமே. அப்படிப்பட்டவர்களுக்காக இன்றைக்கு எந்த ராசிக்கு என்ன பலன்கள் என்று தெரிந
ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்ததும் சிலருக்கு காபியில் தொடங்கும். சிலருக்கு செய்தித்தாளில் ராசிபலன் பார்த்த பின்பு தான் எல்லாமே. அப்படிப்பட்டவர்களுக்காக இன்றைக்கு எந்த ராசிக்கு என்ன பலன்கள் என்று தெரிந்து கொள்வோமா… அப்படி இன்னைக்கு கும்ப ராசிக்காரர் எதிலும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தேவையில்லாத விவாதங்களையும் முன் பின் தெரியாத புதிய ஆட்களிடம் பேசுவதையும் முற்றிலும் தவிர்த்திடுவது நல்லது.

மேஷம்: 21 மார்ச் – 20 ஏப்ரல்
உங்களுடைய சாதுர்யமான திறமையான பேச்சுக்களின் மூலம் சில வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளுக்கு இடையே கருத்து மோதல்க்ள வளர்த்துக் கொள்ளாமல் அனுசரித்துச் செல்லுங்கள். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை செலுத்தலாம். முக்கிய பொறுப்பில், உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உங்களுக்குத் தெரியாமல் பல்வேறு விமர்சனங்கள் எழும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

ரிஷபம்: ஏப்ரல் 20 – மே 20
புதிய அறிமுகம்இல்லாத நபர்கள் மூலம் லாபம் உண்டாகும். பணியில் உங்களுடைய பொறுப்பு அதிகரித்துக் கொண்டே செல்லும். பொது சேவைகளில் ஈடுபடுகிறவர்களுக்கு இன்று சாதகமான நாளாக அமையும். வியாபாரத்தில் உங்களுடைய முதலீடுகள் அதிகமாகும். அதற்கேற்ப லாபமும் உண்டாகும். நீங்கள் பணிக்கு சேர்க்கும் புதிய நபரின் ஆதரவினால் நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

மிதுனம்: 22 மே – 21 ஜூன்
மனதில் இதுவரை இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி, தெளிவு உண்டாகும். உங்களுடைய முழு திறமையையும் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வீட்டில் பொருள்களை வாங்கிக் குவிப்பீர்கள். உயர் அதிகாரிகள் மீது இருந்து வந்த மனக்கசப்புகளட குறையும். ஆடை மற்றும் ஆபரணச் சேர்க்கைகள் பெருகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

கடகம்: 22 ஜூன் – 22 ஜூலை
குடும்பத்தில் உள்ளவர்களுக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். உங்களுக்கு கிடைக்கும் எதிர்பாராத உதவிகளால் உங்களுக்கு மேன்மை உண்டாகும். வேலை சம்பந்தப்பட்ட முடிவுகளால் உங்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். எடுத்த காரியத்தை மிகச் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.

சிம்மம்: 23 ஜூலை – 21 ஆகஸ்ட்
நீண்ட நாள் கழித்து நெருங்கிய உறவினர்களை சந்திப்பீர்கள். அதனால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். எடுத்த காரியத்தை செய்து முடிக்க கொஞ்சம் கால தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் உங்களுடைய மதிப்புகள் உயரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

கன்னி: 22 ஆகஸ்ட் – 23 செப்டம்பர்
வீட்டுக்கு உறவினர்களின் வருகையினால் வீடே கலகலப்பாகிவிடும். வேலை சம்பந்தப்பட்ட புதுபு்புது முயற்சிகளில் வெற்றி உண்டாகும். வேலை சம்பந்தமாக ஆலோசனைகளைப் பெறுவீர்கள். செய்கின்ற செயல்களில் உங்களுக்கு மேன்மையான சூழல்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

துலாம்: 24 செப்டம்பர்- 23 அக்டோபர்
பயணங்களின் மூலமாக உங்களுக்கு அனுகூலமான சூழல்கள் ஏற்படும். எதிர்பார்த்து காத்திருந்த பண வரவுகள் கைக்கு வந்து சேரும். வியாபாரத்தில் நண்பர்களின் மூலம் உங்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். சக ஊழியர்களுக்கு உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் இருக்கும்.

விருச்சிகம்: 24 அக்டோபர்- 22 நவம்பர்
வேலையில் கொஞ்சம் அலைச்சல்கள் இருக்கும். செய்கின்ற வேலையை கொஞ்சம் நிதானத்துடன் செய்து முடிப்பீர்கள். கவனக் குறைவினால் சிறு சிறு அவமரியாதைகளும் தவறான பெயரும் கிடைக்கும். கோபத்தைக் கட்டுப்படுத்தி நிதானமாக செயல்படுவது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

தனுசு: 23 நவம்பர்- 22 டிசம்பர்
செய்யும் தொழிலில் இதுவரை இருந்து வந்த இழுபறி நிலை நீங்கி, சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். உடல் சோர்வு நீங்கும். மனமும் உடலும் புத்துணர்ச்சி பெறும். தொழிலில் வேலையாட்களின் மூலமாக உண்டான இன்னல்கள் குறையும். பணியில் முயற்சிக்கு ஏற்ற அங்கீகாரங்கள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.