இன்று மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் இவர்கள் தான்

நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும் தினசரி அதை பார்க்காமலும் இருக்க முடியாது.

இன்று மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா?
மேஷம்
கூட்டாளிகளை அனுசரித்துச் செல்லவும். நண்பர்களுடன் சேர்நுது செல்லும் வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். தாய் பற்றிய கவலை அதிகரிக்கும். சர்வதேச வணிகத்தில் எதிர்பார்த்த மேன்மை உண்டாகும். தூர தேசத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும்.

அதிர்ஷ்ட திசை – மேற்கு
அதிர்ஷ்ட எண் – 9
அதிர்ஷ்ட நிறம் – அடர் சிவப்பு

ரிஷபம்
உயர் பதவி கிடைப்பதற்கு சாதகமான சூழல் அமையும். பிள்ளைகளால் ஆதாயம் உண்டாகும். பயணங்களில் எச்சரிக்கையாக செயல்படவும். அறக்காரியங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள். தந்தையுடன் ஏற்பட்ட பிரச்னைகள் குறையும். வாகனங்களால் விரயச் செலவுகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை – தெற்கு
அதிர்ஷ்ட எண் – 8
அதிர்ஷ்ட நிறம் – நீலநிறம்

மிதுனம்
போட்டிகளில் சாதகமான சூழல் உண்டாகும். சந்தேக உணர்வுகளால் நெருக்கமான உறவினர்களுக்கிடையே விரிசல்கள் உண்டாகும். அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை – கிழக்கு
அதிர்ஷ்ட எண் – 6
அதிர்ஷ்ட நிறம் – சாம்பல் நிறம்

கடகம்
எடுத்துரைக்கும் பேச்சாற்றலால் லாபம் உண்டாகும். பணியில் உள்ளவர்களுக்கு உடன் பணிபுரிபவர்களால் ஆதரவு கிடைக்கும். பொதுத்தொண்டில் ஈடுபடுபவர்கள் கவனமாக செயல்பட வேண்டும். அருள்தரும் வேள்விகளில் கலந்து கொண்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை – கிழக்கு
அதிர்ஷ்ட எண் – 1
அதிர்ஷ்ட நிறம் – சிவப்பு நிறம்

சிம்மம்
உடல்நலத்தில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். தொழில் சம்பந்தமாக சொந்த ஊருக்கு பயணம் மேற்கொள்வீர்கள். தொழிலில் மாற்றங்கள் செய்வதற்கான எண்ணங்கள் மேலோங்கும். பணிபுரியும் இடங்களில் செல்வாக்கு உயரும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை – தெற்கு
அதிர்ஷ்ட எண் – 5
அதிர்ஷ்ட நிறம் – இளம் பச்சை

கன்னி
குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். ஆபரணச் சேர்க்கை உண்டாகும். திருமணப் பேச்சுவார்த்தைகள் கைகூடும். கூட்டாளிகள் ஒத்துழைப்பால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். நிர்வாகத் துறையில் உள்ளவர்களுக்கு சாதகமற்ற சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை – கிழக்கு
அதிர்ஷ்ட எண் – 3
அதிர்ஷ்ட நிறம் – இளம் மஞ்சள்

துலாம்
தொழிலில் கூட்டாளிகளால் சாதகமான சூழல் உண்டாகும். பணியில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் மந்தநிலை உண்டாகும். வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும். தொழில் சம்பந்தமான வீண் அலைச்சல்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை – தெற்கு
அதிர்ஷ்ட எண் – 7
அதிர்ஷ்ட நிறம் – பல வண்ண நிறங்கள்

விருச்சிகம்
கணவன், மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். நண்பர்களினால் சுப விரயம் உண்டாகும். விவாதங்களில் சாதகமான சூழல் அமையும். கல்வி பயில்பவர்களின் அறிவுக்கூர்மை வெளிப்படும். வெளிநாட்டு தொழில் முயற்சிகள் சாதகமான பலனைத் தரும்.

அதிர்ஷ்ட திசை – மேற்கு
அதிர்ஷ்ட எண் – 8
அதிர்ஷ்ட நிறம் – இள நீலம்

தனுசு
உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனத்துடன் செயல்படவும். நண்பர்கள் மூலம் தனவரவு அதிகரிக்கும். செய்தொழிலால் உயர்வு உண்டாகும். சபைகளில் பிறரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பணிச்சுமை அதிகரிக்கும். புதிய நபர்களால் தேவையில்லாதம சிறுசிறு பிரச்னைகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை – தெற்கு
அதிர்ஷ்ட எண் – 2
அதிர்ஷ்ட நிறம் – வெள்ளை நிறம்

மகரம்
இளைய சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். தாய்மாமன் உறவுகளால் சுப செய்திகள் உண்டாகும். பணியில் உள்ளவர்களுக்கு மேன்மை உண்டாகும். நிர்வாகத்தில் பொறுப்புகள் கூடும். தொழில்ல் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். போட்டிகளில் சாதகமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை – கிழக்கு
அதிர்ஷ்ட எண் – 9
அதிர்ஷ்ட நிறம் – ஆரஞ்சு நிறம்
கும்பம்
மனைகளால் லாபம் உண்டாகும். பொது காரியங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டாகும். வாடிக்கையாளர்களின் ஆதரவால் தனலாபம் உண்டாகும். பொருளாதார மேன்மை உண்டாகும். சாதுர்யமான பேச்சுகளால் லாபம் உண்டாகும். எந்தவொரு செயலிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும்.

அதிர்ஷ்ட திசை – தெற்கு
அதிர்ஷ்ட எண் – 3
அதிர்ஷ்ட நிறம் – அடர் மஞ்சள்

மீனம்
வாரிசுகளால் சாதகமான சூழல் உண்டாகும். மனக்கவலைகள் குறைந்து புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். பணியில் உயர் அதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். இடது கண் சம்பந்தமான பிரச்னைகள்உண்டாகும். சிந்தனைகளில் மாற்றம் உண்டாகும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை – மேற்கு
அதிர்ஷ்ட எண் – 6
அதிர்ஷ்ட நிறம் – வெள்ளை நிறம்

Subscribe to YouTube Channel