இன்று மட்டும் இந்த ராசிக்காரர் தாங்க செம லக்கி மேன் இதுல உங்க ராசி இருக்கா

ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்ததும் சிலருக்கு காபியில் தொடங்கும். சிலருக்கு செய்தித்தாளில் ராசிபலன் பார்த்த பின்பு தான் எல்லாமே. அப்படிப்பட்டவர்களுக்காக இன்றைக்கு எந்த ராசிக்கு என்ன பலன்கள் என்று தெரிந்து கொள்வோமா…

அப்படி இன்னைக்கு மீன ராசிக்காரர்கள் எதிலும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தேவையில்லாத விவாதங்களையும் முன் பின் தெரியாத புதிய ஆட்களிடம் பேசுவதையும் முற்றிலும் தவிர்த்திடுங்கள்

மேஷம்
சமூக சேவை புரிகின்றவர்குளுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும். பயிணில் தேவையில்லாத அலைச்சல்கள் மற்றும் விரயச் செலவுகள் ஏற்படும். திருமண வரன்கள் உங்களுக்கு சாதகமானதாக வந்து அமையும். வாகன வசதிகள் மேம்படும். உங்களுடைய திறமைகளின் மூலமாக பணியில் உங்களுக்கான பொறுப்புகள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிாஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக 5 ம் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

ரிஷபம்

மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கி, புத்துணர்ச்சி அதிகரிக்கும். வேளாண் தொழிலில் எதிர்பார்த்ததை விடவும் அதிக லாபம் உண்டாகும். உங்களுடைய சிந்தனையின் போக்கினில் மாற்றங்கள் ஏற்படும். உடன் பிறந்த சகோதர சகோரர்களிடம் வீண் வாக்குவாதங்கள் ஏதும் செய்யாதீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

மிதுனம்

பொதுகு கூட்டங்களில் பேசும்போது உங்களுக்கு அமோகமான ஆதரவுகள் உண்டாகும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் தீர்ந்து தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். பயணங்களில் உங்களுக்கு இருந்து வந்த குழப்பங்கள் தீர்ந்து இன்னல்கள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். புதிய முயற்சிகளை தொழிலில் பரிசோதனை செய்து பார்ப்பீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

கடகம்

தொழிலில் உங்களுடைய திறமையினால் உங்கள் மீதான மதிப்புகள் அதிகரிக்கும். வீடு மற்றும் மனை சம்பந்தப்பட்ட விவாகாரங்களில் சிறு சிறு தடைகள் மற்றும் தாமதங்கள் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உறவினர்களிடம் சற்று கவனத்துடன் இருங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் சிவப்பு நிறமும் இருக்கும்.

சிம்மம்

பொது நல காரியங்களில் ஆடுபடுகிறவர்கள் கொஞ்சமட அமைதி காப்பது நல்லது. புதிதாக ஏதேனும் முடிவுகள் எடுக்க வேண்டும் என்று நினைத்தால் பெரியோர்களுடைய ஆலோசனைகளைக் கேட்டுப் பெறுங்கள். வாகனங்களில் பயணங்கள் மேற்கொள்ளும்போது, கவனமாக இருக்க வேண்டும். செய்யும் வேலைகளில் கொஞ்சம் நிதானமாக இருக்க வேண்டும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் இருக்கும்.

கன்னி

உங்களுடைய பேச்சுத் திறமையினால் லாபம் உண்டாகும். பொருளாதார முன்னேற்றத்துக்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய நபர்களுடைய ஆதரவினால் சுபிட்சங்கள் உண்டாகும். வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பேச்சுத் திறமையினால் அனுகூலங்கள் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

துலாம்

குடும்ப உறுப்பினர்களைப் பற்றிய கவலையினால் மனதில் சோர்வு உண்டாகும். நண்பர்களுடன் வீண் விதாதங்களைத் தவிர்ப்பது நல்லது. கால்நடைகளிடம் கொஞ்சம் கவனத்துடன் செயல்படுங்கள். வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்து வந்த இழுபறி நீங்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.

விருச்சிகம்

பயணங்களால் எண்ணிய எண்ணம் ஈடேறும். நினைவாற்றலில் மந்தத் தன்மை உண்டாகும் வாய்ப்பு உண்டாகும்.உடல் சோர்வின் காரணமாக பணியை கொஞ்சம் கால தாமதமாக செய்து முடிப்பீர்கள். சுப செய்திகளின் மூலமாக சுப விரயங்கள் ஏற்படும். தாய் மற்றும் தந்தை பற்றிய கவலைகள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

தனுசு

இசை சம்பந்தப்பட்ட துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். மக்கள் தொடர்பு துறையில், உள்ளவர்களுக்கு மேன்மை உண்டாகும். நண்பர்களுடைய ஆதரவினால் தடைபட்ட காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். தந்தையின் உடல் நலத்தில் கொஞசம் கவனம் செலுத்துங்கள். புதிய இலக்கினை நிர்ணயித்து பயணம் செய்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

மகரம்

புதிய தொழில் முதலீடுகளில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். சொந்தங்கள் பற்றிய புரிதல் உணர்வு ஏற்படும். அரசாங்கப் பணிகளில் உங்களுக்கு சாதகமான சூழல்கள் அமையுமு. இறை வழிபாட்டினில் மனம் ஈடுபடும். உறவுகளிடம் அமைதிப் போக்கிளைக் கையாளுங்கள். எதிர்பாராத செலவுகளால் நெருக்கடியான சூழல் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

கும்பம்

செய்கின்ற தொழிலில் புதிய புதிய வாய்ப்புகள் உண்டாகும். மகான்களுடைய தரிசனங்கள் மற்றும் ஆசிர்வாதங்கள் கிடைக்கும். தந்தையின் சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும். உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

மீனம்

இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட பணியில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படுவார்குள். எண்ணிய காரியங்களை முடிப்பதில் கொஞ்சம் கால தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பிறருடைய பணிகளையும் சேர்த்து பார்க்க வேண்டியிருக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.