இந்த ராசிக்காரர் இன்று எத தொட்டாலும் பொன்னாக மாறும் உங்க ராசி இதுல இருக்கா

ஒருவர் ஜாலியாக இருப்பதற்கும் அவர்களுடைய ராசிக்கும் கிரகங்களுக்கும் நிறைய சம்மந்தம் இருக்கிறது.சிலருக்கு அன்றைக்கு நடக்கும் எல்லா செயல்களுக்கும் தன்னுடைய ராசியும் தான் அணிந்திருக்கும் உடையும் தான் காரணம் என எளிதாக நிம்மதியுடன் அன்றைய நாளை கடந்து சென்று விடுவார்கள். சிலரோ இன்றைய நாள் சிறப்பாக இல்லாததற்கு, நாம் காலையில் ராசிபலனைப் பார்த்து அதன்படி நடந்து கொள்ளாததுதான் காரணமோ என்று கூட நினைக்கலாம். அப்படி மக்களின் மனதில் ஆழப்பதிந்த ஒரு விஷயம்தான் ஜோதிடம். அப்படி இன்றைக்கு என்னென்ன ராசிக்கு என்னென்ன பலன்கள் உண்டாகும் எனப் பார்ப்போம். அந்த ஜோதிடத்தின் மூலம் நாம் வாழ்க்கையில் யாரை நம்பலாம், யாரை நம்பக்கூடாது என்பது வரை மிகத் தெளிவாக ஜோதிடத்தில் நம்மால் அறிந்து கொள்ள முடியும்.

ஜோதிடம்

12 ராசிகளும் ஐம்பூதங்களின் தன்மைக்கு ஏற்ப ஆகாயத்தைத் தவிர, நிலம், நீர், காற்று, நெருப்பு ஆகிய நான்கு வகைக்கும் மூன்று மூன்றாகப் பிரிக்கப்படுகிறது. அந்த இயற் பொருள்களின் தன்மைக்கேற்பவும் கோள்களின் இயக்கங்களுக்கு ஏற்பவும் பலன்கள் கணிக்கப்படுகின்றன. அந்த கோள்களின் இயக்கங்களுக்கு ஏற்ப இயற்கையின் செயல்பாடுகள் மாறும். அதை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுவது தான் ஜோதிடம். இது நம்முடைய முன்னோர்களின் வானியல் அறிவுக்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டு. அதனால் எந்த விஷயத்திலும் நம்பிக்கையோடு செயல்பட்டால் வெற்றி நமக்கு நிச்சயம் தான். நம்பிக்கை இல்லையென்றால் அதைப்பற்றி சிந்தித்து நம்முடைய நேரத்தைக் கடத்தக்கூடாது. ஒரு விஷயத்தின் மீதான நம்பிக்கைத்தன்மை அந்த விஷயத்தின் முழுமையை நமக்குப் புரிய வைக்கும்.

இந்த ராசிக்காரர் இன்னைக்கு எதை தெட்டாலும் பொன்னாக மாறும்… அந்த அதிர்ஷ்டசாலி யாருன்னு தெரிஞ்சிக்கணுமா?
மேஷம்
வீட்டில் குழந்தைகளுக்கு எது தேவையோ அதை நிவர்த்தி செய்து வைப்பீர்கள். குடும்ப பரம்பரை சொத்துக்களில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். புதிதாக உருவான நட்பு வட்டத்தின் மூலம் போதிய அனுகூலங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கும் அதிர்ஷ்ட எண்ணாக 2 ம் அதிர்ஷ்ட நிறமாக இளம்மஞ்சளும் இருக்கும்.

ரிஷபம்

நீண்ட பயணங்களை விடவும் சிறுசிறு பயணங்களால் நன்மைகள் அதிகமாக இருக்கும். எந்த செயலைச் செய்தாலும் அதில் பதட்டம் இல்லாமல் நிதானமாகச் செயல்படவும். வீட்டில் உள்ளவர்களிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். பண உதவிகள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து வந்து சேர, கால தாமதமாகும். புதுப்புது விஷயங்களை முயற்சி செய்து பார்க்கும் ஆர்வம் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக வடக்கும் அதிர்ஷ்ட எண்ணாக 5ம் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

 

மிதுனம்

வேலை தேடுகிறவர்கள் அவர்களுடைய தகுதிக்கு ஏற்ற வேலையை நிச்சயம் பெறுவார்கள். உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் ஆதாயம் உண்டாகும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். பணியிடத்தில் மனநிறைவும் நிம்மதியும் ஏற்படும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரும் எண்ணாக எண் 6ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

 

 கடகம்

வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் போதிய அளவு முன்னேற்றம் ஏற்படும். விவசாயம் சம்பந்தப்பட்ட பணிகளில் மேன்மையான சூழல்கள் உண்டாகும். எந்த வேலையாக இருந்தாலும் மிக வேகமாக செய்து முடிப்பீர்கள். உயர் பதவியில் இருப்பவர்கள் தன்னுடன் பணிபுரியும் மற்ற ஊழியர்களின் ஒத்துழைப்புடன் சிறப்பாகச் செயல்படுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண் 1 ஆகவும் அதிர்ஷ்ட திசை தென்கிழக்காகவும் அதிர்ஷ்ட நிறம் அடர் மஞ்சளாகவும் இருக்கும்.

சிம்மம்

வியாபாரம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய சூழல் உண்டாகும். அரசாங்கம் சம்பந்தப்பட்ட, தாமதமாகிக் கொண்டே போன பணிகள் உங்களுக்கு சாதகமாகவே முடியும். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்கள் மூலம் ஆதாயங்கள் உண்டாகும். உடல் நலனில் முன்னேற்றம் ஏற்படும். பயணங்கள் மகிழ்ச்சியையும் மன நிம்மதியையும் தரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக 9 ம் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சளும் இருக்கும்.

 

கன்னி

பெற்றோர்கள் வழி உறவினர்களிடம் கொஞ்சம் கனிவுடன் நடந்து கொள்ளுங்கள். எந்த செயலைச் செய்தாலும் அதில் கொஞ்சம் கவனமாக இருங்கள். பிறருக்கு உதவுவது பெரிதல்ல. சரியான விஷயத்துக்கு உதவுகிறோமா என்று சிந்தித்து பின் செய்வது நல்லது. மணவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். பெரியோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். கடல்சார்ந்த வேலைவாய்ப்புகளால் மேன்மை உண்டாகும். நிர்வாகத்தில் உங்களுடைய புதிய திட்டங்களால் லாபம் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண் 6, அதிர்ஷ்ட திசை வடகிழக்கு, அதிர்ஷ்ட நிறம் சந்தன வெள்ளை.

 

துலாம்

மனதுக்குள் இதுவரை இருந்து வந்த கவலைகள் தீரும். உங்களுடைய எண்ணங்களில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். உணவு அலர்ஜி ஏற்பட வாய்ப்பு இருப்பதால் சாப்பிடும் உணவில் கொஞ்சம் கவனமாக இருங்கள். அரசங்கத்திடம் இருந்து நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த பணிகளில் உஙடகளுக்கு சதகமான பலன்கள் கிடைக்கும். வேலை இடமாற்றம் அல்லது பதவி உயர்வுக்கான சூழல் உண்டாகும். வருமானம் பெருகும். இன்று உங்களுக்கு கிழக்கு திசை அதிர்ஷ்டத்தை தரும். அதேபோல் எண் 8 ம் வெள்ளை நிறமும் அதிர்ஷ்டங்களைக் கொடுக்கும்.

 

விருச்சிகம்

பயணங்கள் மேற்கொள்ளும் சூழல் ஏற்பட்டால் தவிர்க்காமல் செல்லுங்கள். அதன் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும் வாய்ப்பு இருக்கிறது. உங்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். உடன் பணிபுரியும் ஊழியர்களால் ஆதாயம் ஏற்படும். கொடுக்கல், வாங்கலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உறவினர் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். மேலதிகாரிகள் உங்கள்மீது அதிக நம்பிக்கை வைத்திருப்பார்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 3 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

 

தனுசு

முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு கொஞ்சம் பணிச்சுமை குறையும். வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். இதுவரை இழுத்தடித்துக் கொண்டே இருந்த வேலைகளை துரிதமாகச் செய்து முடிப்பீர்கள். மற்றவர்களைப் பற்றி எந்த விமர்சனமும் செய்யாதீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 7ம் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் இருக்கும்.

 

மகரம்

பெரியவர்களின் ஆசிர்வாதத்தோடு இன்றைய நாளை தொடங்குவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உங்களுடைய பேச்சுத் திறமையால் அனைவருடைய மனங்களையும் கவர்வீர்கள். கணவன் – மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் நீங்கும். குழந்தைகளின் தேவைகளை நிவர்த்தி செய்வீர்கள். தொழில் போட்டிகளில் வெற்றி உங்கள் பக்கமே இ.ருக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 9 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

 

 கும்பம்

தாய்வழி உறவினர்களிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். வாகனப் பயணங்களால் சில காரியத் தடைகள் ஏற்பட வாய்ப்புண்டு. சீக்கிம் முடிந்துவிடும் என்று எதிர்பார்த்த வுலை கொஞ்சம் கால தாமதமாகும். போட்டிகளில் வெற்றி உங்கள் பக்கமே. செய்யும் வேலையில் பணியில் கவனத்துடன் செயல்பட வேண்டும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 3ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.

மீனம்

உங்களுடைய வழக்கமான குண நலன்களில் இருந்து கொஞ்சம் வேறுபட்டே நடந்து கொள்வீர்கள். விளையாட்டு வீரர்களுக்கு பாாட்டுக்கள் வந்து குவியும். வீடு கட்டுவதற்கான முயற்சிகள் மேலோங்கும். வியாபாரத்தில் உங்களுடைய புதிய அணுகுமுறையால் லாபம் அதிகமாகும். தன்னம்பிக்கைளுடன் நினைத்த காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். இன்று நீங்கள் எதை தொட்டாலும் அது உங்களுக்கு பொன்னாக மாறும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 9 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமாக இருக்கும்.

 

Subscribe to YouTube Channel