இதுக்கெல்லாமா இதய நோய் வரும்ன்னு நினைக்க கூடாது

சினிமாவில் பார்க்கிற மாதிரி ஒரு வயதான மனிதன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அமர்வது போல் இன்ஸ்டென்டாக இதய நோய்கள் ஏற்படாது.

இதய நோய்கள் ஆற அமர எப்பவோ ஆரம்பித்திருக்கக் கூடும். அதன் அறிகுறிகளும் மெல்ல ஆரம்பித்திருக்கும். இதய நோய்களின் பொதுவான அறிகுறிகளை நீங்கள் கேட்டிருக்கலாம்.

தோள்பட்டை வலி, முதுகு வலி, அதிக சோர்வு என்று. இவையெல்லாம் மாரடைப்பு வருவதற்கு ஒரு சில நாட்கள் முன் வருவது.ஆனால் சில நிகழவுகள் மிகச் சாதரணமாக நடந்து கொண்டிருக்கும்.

அவை இதய நோய்களின் ஆரம்ப காலங்களில் வருபவை. அந்த சமயத்தில் நீங்கள் எச்சரிக்கையாக நடந்து கொண்டால் இதய நோய்கள் வராமல் தடுக்கலாம்.

அடிக்கடி சிறு நீர் கழித்தல்
  • இதயம் செயலிழந்தால் ரத்த ஓட்டம் சரியாக சிறு நீரகங்களுக்கு செல்லாது. அந்த சமயத்தில் அதிக திரவ்ங்கள் சேகரமாகி அடிக்கடி சிறு நீர் கழித்தக் தோன்றும்.
உங்கள் பாதங்கள் மற்றும் கெண்டைக் கால்
  • இதயம் சரியாக பம்ப் செய்யாவிட்டால் ரத்தத்திலுள்ள திரவம் கசிந்து அருகிலுள்ள திசுக்களுக்கு சென்றுவிடும்.
  • பின்னர் அங்கிருந்து கீழ் நோக்கி எல்லா திரவங்களும் பாதம் மற்றும் கெண்டைக்காலிற்கு வந்து வீக்கம் தந்து விடும். இது இதயம் செயலிழப்பிற்கான அறிகுறியே.
உச்சந்தலை சொட்டை
  • பெரும்பாலும் ஆண்களுக்கு மகுடம் போல் நடு உச்சியிலிருந்து சொட்டை ஆரம்பிக்கும் அவர்களுக்கு எல்லாம் இதய நோய்கள் வருவதற்கான அறிகுறிகளாக இருக்கலாமென பல ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
காரணம்
  1. காரணம் என்னவென்றால், சொட்டை, ரத்த கொதிப்பு, அதிக கொழுப்பு மூன்றும் சேர்ந்து இதய நோய் வருவதற்கான அபாயத்தை தருகிறது.. இதற்கு காரணம் அதிகப்படியான டெஸ்டோஸ்டீரான் சுரக்கும்போது அது இதய வால்வுக்ளை தடிமனாக்குகிறது.
  2. அதுவேதான் முடி உதிர்தலுக்கும் காரணமாகிறது. அதற்காக சொட்டை விழுபவர்களுக்கு எல்லாம் இதய நோய் ஆபத்து என்பதில்லை. ஒரு பரிசோதனை செய்து கொள்வது நன்மையே.
இதயம் செயலிழந்ததற்கான அறிகுறிகள்
  • இதய நோய்கள் போலவே இதயம் செயலிழந்து விட்டதற்கான அறிகுறிகளையும் நமது உடல் தெரிவிக்க வைத்துவிடும். அந்த அறிகுறிகளை என்னவென்று பார்க்கலாம்.
உடல் எடை அதிகரிக்கும்.
உடலில் கெட்ட நீர் அதிகம் அதான் உடல் குண்டாயிருக்கு என்பார்களே. அதற்கு காரணம் எட்டிம்மா எனப்படும் வீக்கம்தான்
திரவங்கள் சீராக வடிகட்டி வெளியேற்ற முடியாமல் உள்லேயே தங்கி உடலை ஊதி எடையை அதிகரிக்கச் செய்யும்.

 

Subscribe to my YouTube Channel